ADVERTISEMENT

கரோனா சிகிச்சையில் திருச்சி தங்க வியாபாரிகள்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

11:27 PM Jul 01, 2020 | kalaimohan

ADVERTISEMENT

திருச்சியில் தங்க, வைர வியாபாரிகளுக்கு காரோனா தொற்று அறிகுறி தொடர் கதையாகி வருகிறது. ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலக்கத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT


இது குறித்து தங்க நகையில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களிடம் பேசுகையில், தங்கமானது பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. கரோனா நோய்களின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி என தங்கத்தின் விலை உச்சத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. அதனால் பொதுமக்கள் தங்க நகையில் முதலீடு செய்வதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது .அதுவும் தங்கம், வைர வியாபார முதலாளிகளுக்கு நோய்த்தொற்று பரவி திருச்சியில் பிரபலமான கே.எம்.சி, மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த நகைக் கடையில் நகை வாங்கிய எங்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி திரவம், முகக்கவசம், கையுறை, சமூக இடைவெளி என நோய்த்தொற்றை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல தங்க நகைக்கடைகளில் வெப்பமானி கொண்டு பரிசோதிப்பது கூட கிடையாது. பெரும் செல்வந்தர்கள் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வார்கள் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் எப்படி சமாளிப்பார்கள். தங்க நகைக்கடைகளில் தங்க நகை வாங்குவோர் பணம் கொடுத்தவுடன் நகையை கொடுக்கும் உரிமையாளர் நகை மேல் நகை வாங்கி நல்லா இருக்கணும் என கூறி வழங்குவது வாடிக்கையாக உள்ளது. அந்த உரிமையாளருக்கு நோய்த்தொற்று இருப்பதனால் நகை வாங்கிய பலர் அச்சத்தில் உள்ளார்கள். நகைக்கடைக்கு மாநகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் இருந்து நகை வாங்கி செல்கிறார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் நலன் கருதியும் விடுமுறை என பிரபல தங்க நகைக்கடைகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிசிடிவி காட்சியினை கொண்டு வாடிக்கையாளர் அனைவருக்கும் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

திருச்சியில் பிரபல நகைக்கடையில் மோதிரம் பிரிவில் வேலை பார்த்த ஒரு நபருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தால் விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டார். அவருடைய ஊருக்கு சென்று கரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை விசாரிக்கையில் திருச்சியில் பிரபல நகைக்கடையில் பணிபுரியும் அனைவருக்கும் தங்குவதற்கு அதற்கு அருகாமையில் உள்ள ஒரு பெரிய அறையில் தங்குவோம். அங்கு சுமார் 300க்கு பேருக்கும் மேல் தங்கியிருப்போம் என்று சொல்ல தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சுகாதாரதுறையினர், உடனடியாக அந்த பிரபல நகைக்கடையில் உள்ள முதலாளிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் பரிசோனை செய்தனர். பரிசோதனை முடிவில் அவர்களில் பலருக்கு நோய் தொற்று உறுதியானது, அதைத்தொடர்ந்து நகைக்கடையினை மூடினார்கள். நகைக்கடையில் உள்ள ஊழியர்களுக்கு பரிசோதனை செய்து விட்டனர். ஆனால் நகைகளை வாங்க வந்த பொதுமக்களுக்கு எப்படி பரிசோதனை செய்வார்கள். தற்போது அந்த கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

திருச்சிராப்பள்ளியில் ஜூலை 1ஆம் தேதி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 701 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை முடிந்து வீடு சென்றவர்கள் 369 நபர்களும், சிகிச்சை பெறுபவர்கள் 328 நபர்களும் இறப்பு 4 நபர்கள் என மொத்தம் 701 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT