/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tm1_2.jpg)
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும். மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த ஊரடங்கில் முழுமையாக மூடப்பட்டு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர்- ரோடு வியாபாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற 20-ஆம் தேதி இரவு முதல் காந்தி மார்க்கெட் திறக்க அனுமதி அளிக்கப் போவதாக உறுதியளித்திருந்தார்.
அதன்படிஇன்று இரவு முதல் காந்தி மார்க்கெட் செயல்பட உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு திறக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் முன்வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)