Advertisment

தொடர்கிறதா பழிவாங்கும் படலம்? அடுத்தடுத்து திருச்சியில் நடக்கும் கொலைகள்!

Trichy is in a frenzy due to successive incidents

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. பல்வேறு தொழில்களை செய்து வந்த இவரது மறைவுக்குப் பிறகு அவரது தம்பி கேபிள் சேகர் அண்ணனின் தொழிலோடு சேர்த்து பன்றி வளர்ப்பு, பைனான்ஸ், கேபிள் போன்ற தொழில்கள் செய்து வந்தார். கேபிள் சேகர் முன் விரோதம் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Advertisment

இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த பரத்குமார். சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு பெரியசாமியின் மகனும், பிரபல ரவுடியுமான சிலம்பரசன்(35) அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அரிமயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து நேற்று கரூர் ஜே.எம்.-2 குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த முத்துகுமார்(28), அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், அரியமங்கலம் காளியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகநாதபுரம் ரஞ்சித் (19), அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (20) ஆகிய 4 பேரும்சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பேரில், அவர்கள் 4 பேரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று (30.4.2024) காலை எஸ்ஐடி பகுதியில் உள்ள டீ கடையில் முத்துகுமார் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த 2 பேர் முத்துகுமாரை வெட்டிக் கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர். சிலம்பரசன் கொலை சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக ரவுடி முத்துகுமார், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் தஞ்சை மெயின்ரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rowdy police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe