தமிழக அரசு25-க்கும் அதிகமான ஐபிஎஸ் அதிகாரிகளைபணியிடமாற்றம் செய்துகடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருச்சி மாநகரகாவல்துறை ஆணையராக பணியாற்றி வந்தகார்த்திகேயன் மத்திய மண்டல ஐஜியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் காஞ்சிபுரம் டிஐஜியாக பணியாற்றி வந்த சத்தியபிரியா இன்று திருச்சி மாநகர காவல்ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சி மாநகர காவல் ஆணையர்களாக ஏற்கனவே 31 பேர் பணியாற்றிய நிலையில், திருச்சி மாநகரத்தின் 32 வது ஆணையராகப் பதவியேற்றுக் கொண்டசத்தியபிரியா ஐ.பி.எஸ். முதல் பெண் காவல் ஆணையர்என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
இன்று பொறுப்பேற்ற திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி மாநகரில் போதைப்பொருள்புழக்கத்தை முழுமையாக ஒழிக்கவும், ரவுடியிசத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.குறிப்பாக,போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு பல புதிய திட்டங்களை வைத்திருப்பதாகவும்தெரிவித்துள்ளார்.