trichy Famous Rowdy Madhavan passed away

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மண்டை வெட்டி மாதவன்(50). தலையில் வெட்டிக் கொலை செய்வது இவரது பானியாக வைத்துள்ளார். எனவே மண்டை வெட்டி மாதவன் என்ற அடைமொழியோடு வலம் வந்தபிரபல ரவுடியான மாதவன் மீது மணச்சநல்லூர், மணிகண்டம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.இவர் மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.

குழந்தைகள் இல்லாத நிலையில், தனது மனைவியை கடந்த பத்து வருடத்திற்கு முன்பு பிரிந்த மாதவன் தனியாக வசித்து வந்தார்.அவ்வப்போது ஆட்களை மிரட்டி பணம் பறித்து வாழ்க்கையை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.இந்த சூழலில் அவர் திருவானைக்காவல் நாலுகால் மண்டபம், சன்னதி வீதியில் உள்ள கைலாசம் மண்டபத்தில் அடிக்கடி தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் கைலாசா மண்டபத்தில் தலை வெட்டி சிதைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ஏசி நிவேதா லட்சுமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொம்பன் ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்து வரும் காலங்களில் திருச்சியில் ரவுடிகளுக்குள்மோதிக்கொண்டு ரவுடிகள் கொல்லப்படுவார்கள் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. ஆனால் ஏ.சி நிவேதா லட்சுமி இதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவரது கவனக்குறைவால் மட்டுமே இந்த கொலை அரங்கேறியுள்ளது என்று தெரிவித்தனர்.