trichy election commission officers schools

திருச்சி மாவட்டம், உறையூர் குறத்தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டபுத்தகப் பைகள், கலர் பென்சில்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டு, அங்கிருந்து மற்ற அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக மாற்றுக் கட்சியினருக்கு கிடைத்ததகவலையடுத்து கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.தேர்தல் விதிகளை மீறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் ஒட்டப்பட்டபொருட்கள் விநியோகிப்பதைத் தடுத்து நிறுத்தியதுடன், தேர்தல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

இதனையடுத்து திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நிலைக்குழு கண்காணிப்பாளர் ஜோசப் தலைமையில் காவல்துறையினர் அந்த இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, புத்தகப்பைகள், கலர் பென்சில்கள், பென்சில்கள் உள்ளிட்ட பொருட்களைப் பள்ளிகளுக்கு அனுப்பும் பணியைத் தடுத்து நிறுத்தினர். மேலும் பொருட்கள் அனைத்தையும் பள்ளியின் மாற்று அறையில் சேமித்து வைத்தனர்.

Advertisment

trichy election commission officers schools

இது குறித்து தேர்தல் நிலைக்குழு கண்காணிப்பாளர் ஜோசப் கூறுகையில், "சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏற்கனவே, பள்ளிக் கல்வித்துறை மூலம் வரவழைக்கப்பட்டுள்ளபொருட்கள் ஏனைய அரசுப் பள்ளிகளுக்கு வழங்கியதாகவும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இது தெரிய வந்ததாகவும் கூறினார்.மேலும், முன்னாள் முதல்வர்கள் படம் இடம் பெற்றிருந்தது,விதிமுறை மீறல் என்பதால், மாற்று இடத்தில் இதனைப் பூட்டி வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.