அரசுப் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாக ரத்தினம் விசாரணைக்காகச் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். அதே சமயம் போலீசார் மாணவியின் மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.