Advertisment

டிரஸ்ட் மூலம் சம்பாதிக்கலாம்.. ஆசை காட்டி மோசடி செய்த டாக்டர்கள்! 

Trichy Doctors fraudulent case

திருச்சி மாவட்டம், தென்னூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (43). இவரிடம் டாக்டர் பிரகாஷ், அழகேசன், டாக்டர் பூஜா ஆகியோர் பழகி வந்துள்ளனர். இவர்கள் அசோக்கிடம், நாச்சிகுறிச்சி வாசன் வெளிப்பகுதியில் ஒரு டிரஸ்ட் நடத்தி வருவதாக கூறியுள்ளனர். மேலும், டிரஸ்டில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பு தொகை வழங்குவதாகவும் அவர்கள் அசோக்கிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனை நம்பிய அசோக், 95 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஒரு வருடத்திற்குபிறகு 1 கோடியே 90 லட்சம் தருவதாக அவர்கள் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் ஒரு வருடம் முடிந்த பின்பும் அந்த தொகை திருப்பித் தரப்படவில்லை. இதுகுறித்து அசோக் திருச்சி நீதிமன்றம் ஜே.எம் 1ல் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe