Advertisment

உதயநிதிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்க கே.என்.நேரு தலைமையில் தீர்மானம் 

திருச்சியில் இன்று திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, தெற்கு பேரூர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தை துவக்கி வைத்து கே.என்.நேரு பேசியபோது,

Advertisment

t

திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து நடைபெறுகிறது. இதில் முதல் கூட்டமாக திருச்சியில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் வருகிற ஜீன் 15ம் தேதி நடைபெறுகிறது.

t

Advertisment

இந்த கூட்டத்திற்கு திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞசாவூர், நாகை, நாகப்பட்டினம் ஆகிய பகுதியில் இருந்து தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்திற்கு முன்னதாக மாலை 4.00 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலையை தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

t

இந்த கூட்டத்தில் மிக முக்கிய தீர்மானமாக திமுக தொடந்து தனது வெற்றிபயணத்தை தொடர்வதற்காகவும், திமுக இளைஞர் அணியை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் அணி செயலாளர் பதவியை உதயநிதி அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவினர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

uthayanithi stalin trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe