திருச்சி மாநகரில் உள்ள காலியான இடங்களில் முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வந்தன. இந்நிலையில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத, இந்த இடத்தில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தன. இந்த செடிகளுக்கு நடுவே ஆங்காங்கே கஞ்சா செடிகளும் 3 அடி உயரத்திற்கு வளர்ந்து இருந்தன. இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

trichy district urban area tree peoples shock

சமூக விரோதிகள் யாரேனும் திட்டமிட்டு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்தார்களா? அல்லது மர்ம நபர்கள் அங்கு அமர்ந்து கஞ்சா பயன்படுத்தியபோது, அதில் இருந்து சிதறிய விதைகள் மூலம் செடிகள் வளர்ந்ததா? என்பது தெரியவில்லை.

Advertisment

உடனடியாக இது குறித்து தென்னூர் பகுதி மக்கள், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த ராயல்சித்திக் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தில்லைநகர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், பொதுமக்கள் முன்னிலையில், அங்கு வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை அகற்றி அழித்தனர்.

trichy district urban area tree peoples shock

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வந்துள்ள நிலையில் இதை ஒழிப்பதற்கு போலீஸ் திக்குமுக்காடி கொண்டிருக்கும் நிலையில் தற்போது மாநகரின் நடுவில் கஞ்சா செடி வளர்ந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment