திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டுவருகிறது. பொதுமக்களின் வசதிக்காக அந்தந்த பகுதியிலேயே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இன்றைய தினம் (21.08.2021) திருச்சி மாநகர் பகுதியில் 35 இடங்களிலும், புறநகர் பகுதியில் 64 இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது. இவ்வாறு திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 99 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த 99 இடங்களில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாநகரில் 13,000டோஸ்கள், புறநகரில் 21,740 டோஸ்கள் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 35,040 டோஸ்கள் செலுத்தப்பட்டுவருகிறது. திருச்சி மாவட்டத்தில் இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக அளவிலானதடுப்பூசி முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல்முறை.
தடுப்பூசி செலுத்துவதில் அதிரடி காட்டும் திருச்சி மாவட்டம்
Advertisment