/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/accident-art_3.jpg)
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று 5 பேர் மீது மோதி கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)