trichy district rowdy incident police investigation

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும்அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடி பிரவீன்குமார். இவர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை எதிரே இருந்தபோது, பிரவீன் குமாரை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தலையில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த டோல்கேட் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், 8 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாகக் கொலை நடந்திருக்கலாம், பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், கவுதம் உள்ளிட்ட 5 பேர் இந்த கொலையைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment