ADVERTISEMENT

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய திருச்சி மாவட்ட முஸ்லீம் லீக் கட்சியினர்!!

01:34 PM Jun 12, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்டக் கிளை சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவூண்டானா அருகில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொன்டு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் செய்தனர். அவை, ‘அமைதி பூங்காவாக இருக்கும் லட்சத்தீவை கரோனா நோய்த் தொற்றின் பிடியில் சிக்கவைத்தது மட்டுமின்றி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட PROFUL KHODA PATEL இன் பதவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஏழை, எளிய மக்கள் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டுவரும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தடுக்க மத்திய அரசு வழி செய்ய வேண்டும். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் சாதிக் பாட்சா பாவா தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொண்டது போல், இனி வரும் காலங்களில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளிலே ஜாதி, மத பேதமின்றி அப்பாவி சிறைவாசிகளையும், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்திக் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளர் ஐனுல்லா மகுது, அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காஜா முஹையத்தீன், தேசிய பொதுச் செயலாளர் முகமது மீரான், தமிழ் மாநில செய்தி தொடர்பாளர் தீபக், திருச்சி மாவட்டப் பொருளாளர் உசேன் ஷரீப், திருச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது யூசுப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT