/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/t666_0.jpg)
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மனைவி மற்றும் அவருடைய இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நந்தகுமாரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், மகன் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் சிகிச்சைப் பலனின்றி விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் நந்தகுமாரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நந்தகுமார் எப்போதும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளதாகவும், அன்றாட தேவைகளுக்கு கூட போதுமான அளவில் வருமானம் இல்லாமல் தொடர்ந்து வறுமையை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நந்தகுமார் தற்போது வீட்டில் இல்லாத நிலையில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்பட 4 பேரும் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)