திருச்சியில் இன்று (27/01/2020) காலை பாஜக பிரமுகர் விஜயரகு காந்தி மார்க்கெட் பகுதியில் ஓட ஓட வெட்டிக் கொன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த கொலைக்கு காதல் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மிட்டாய் பாபு என்பவர் மூன்று பேருடன் சேர்ந்து கொலை செய்தார். அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisment

trichy district continue incident peoples shock police investigation

இதனால் திருச்சி மாநகர் முழுவதும் இன்று மதியத்திற்கு பிறகு கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது. பதற்றத்தைத் தணிப்பதற்காக திருச்சி மாநகர காவல் துறையினர் திருச்சி மாநகர் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். காவல்துறையினரின் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு இரவு 07.30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் விஜயரகுவின் உடல் ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.

பாஜக பிரமுகர் விஜயரகு கொலை சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டத்தை தனித்த போலீசார் பெருமூச்சு அடங்குவதற்குள் அடுத்த சில மணி நேரத்தில் இரண்டாவது கொலை நடைபெற்றிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் ஜலால் குத்ரி தெருவில் கழிவறை ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டிருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

இன்று காலை ஒரு கொலையும் இரவு இரண்டாவது கொலை நடந்திருப்பது திருச்சி மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.