Advertisment

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் 

trichy district congress committee against for bjp union government 

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சிவழக்கறிஞர் பிரிவு சார்பாகஇன்று (29.3.2023) காலை 11 மணி அளவில் ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற வலியுறுத்தப்பட்டது. பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினரும் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவருமான எம். ராஜேந்திரகுமார், மாநிலச் செயலாளர் கிருபாகரன் மற்றும் வழக்கறிஞர்கள் என ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள்கலந்துகொண்டு கண்டன முழக்கங்களைஎழுப்பினர்.

Adani congress modi trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe