Published on 10/12/2021 | Edited on 10/12/2021

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முப்பத்தி ஏழாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள திருச்சிக்கு வந்திருந்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. அவர் 8ஆம் தேதி காலை திருச்சி வந்து சேர்ந்தவர் பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி முதல்வர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 9ஆம் தேதி காலை ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பல்கலைக்கழகத்தில் மறைந்த முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் 2238 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதன்பின் இன்று காலை திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்ல விமான நிலையத்திற்கு வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பூங்கொத்து வழங்கி வழியனுப்பினார்.