Skip to main content

அரசு பேருந்து நடத்துனரிடம் போலீசார் வாக்குவாதம்...நடத்துனர் மரணமடைந்ததால் பரபரப்பு! 

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் திட்டக்குடியில் காவலராக பணியாற்றும் பழனிவேல் என்பவர் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ஏறினார். அப்போது நடத்துனர் கோபிநாத் பழனிவேலிடம் டிக்கெட் எடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு காவலர் பழனிவேல், நான் போலீஸ் என்று கூறியுள்ளார்.

thirchy to cuddalore bus conductor incident not get ticket in police reason

காவலர் சீருடையில் இல்லாமல் மாற்று உடையில் இருந்ததால், நடத்துனர் கோபிநாத் 'உங்களுடைய அடையாள அட்டை காட்டுங்கள்' என்று கேட்டபோது,  'நான் உன்னிடம் காட்ட மாட்டேன்' என்று காவலர் பழனிவேல்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது இரண்டு பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  

thirchy to cuddalore bus conductor incident not get ticket in police reason


பின்னர் ஊமங்கலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது நடத்துனர் கோபிநாத் திடீரென்று மயக்கமடைந்து பேருந்தின் உள்ளேயே விழுந்துள்ளார். பிறகு உடனடியாக நெய்வேலி தனியார் மருத்துவமனையில் கோபிநாத்தை அனுமதித்தனர். இந்நிலையில் அவர் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காவலர் பழனிவேலை பிடித்து வைத்திருந்தனர்.



பின்னர் தகவலறிந்த மந்தாரக்குப்பம் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து பழனிவேலை அழைத்துச் சென்றுள்ளனர். இறந்த கோபிநாத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்