/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2563.jpg)
திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்டவெங்கடாஜபுரம்பகுதி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர்கள்தனிஸ்லாஸ்மற்றும்ஆரோக்கியசாமி. இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2014 ஏப்ரல் மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஆரோக்கியசாமி, அவரது மகன் சசிகுமார், அவரது மனைவிதனமேரிஆகிய மூவரும் சேர்ந்துதனிஸ்லாஸ்மற்றும் அவரது மகனான நெப்போலியன்ஆகியோரைகுத்துக் கோல் கொண்டு குத்தியதில் சம்பவ இடத்திலேயேஇறந்துவிட்டனர்.
இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திருச்சி நீதிமன்றத்தில் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிதனவேல், அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களைஅடிப்படையாகக்கொண்டும், சாட்சிகளை விசாரணை செய்தும், இந்த வழக்கில்தனிஸ்லாஸ்மற்றும் அவரது மகன் நெப்போலியன் இருவரும் கொலை செய்யப்பட்டது உறுதி செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஆரோக்கியசாமி மகன் சசிக்குமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளியான ஆரோக்கியசாமியின் மனைவிதனமேரிக்கு1 ஆண்டுசிறைதண்டனையும், 5ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றவாளியான ஆரோக்கியசாமிக்கு ஒருஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)