/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/34_52.jpg)
திருச்சி மாநகராட்சியின் கோட்டத்தலைவர்களாக போட்டியிடுபவர்களின் பட்டியல் நேற்று(29.3.2022) மாலை திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று (30.3.2022) காலை மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் திமுகவை சேர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதலாவதாக மண்டலம் 1 -ஆண்டாள் ராம்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து மண்டலம் 2- ஜெய நிர்மலா, மண்டலம் 3- மதிவாணன், மண்டலம் 4- துர்காதேவி, மண்டலம் 5- விஜயலட்சுமி கண்ணன், நிலைக் குழு தலைவர்கள் நியமனக்குழு உறுப்பினர் கணக்குழுத்தலைவர் - லீலா வேலு, தலைவர் பொது சுகாதாரக்குழு - நீலமேகம், கல்விக்குழு தலைவர்- பொற்கொடி, வரி விதிப்பு நிதிக்குழுத் தலைவர் நாகராஜ் மற்றும் கே. எஸ் நகரமைப்பு குழுத் தலைவர் - இ எம் தர்மராஜ், பணிகள் குழுத்தலைவர் கவிதா செல்வம்,நியமனக்குழு தலைவர் செல்வன் முத்து உள்ளிட்ட அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் வெற்றி பெற்ற கோட்ட தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)