ADVERTISEMENT

500 ஆண்டு பழைமையான அரச மரத்தை வெட்டிய திருச்சி மாநகராட்சி! தடுத்த இளைஞர்கள்..

09:06 PM Aug 30, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மரம் நம்முடைய சமூக வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மரம். அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சீனா வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரச மரத்தை வெட்டில் நம் வம்சம் தழைக்காது என்று முன்னோர் சொல்லுவார்கள். அதனால் அரசமரத்தை கடவுளாக கூட பல இடங்களில் வணங்குகிறார்கள்.

ADVERTISEMENT

திருச்சியில் 500 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான அரசமரத்தை திருச்சியை ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் வெட்டி வீழ்த்தியதை தண்ணீர் இயக்கத்தை சேர்ந்தவர் தடுத்தி நிறுத்தியிருக்கிறார். வெட்ட யார் அனுமதி கொடுத்தார்கள் என்கிற கேள்வி விடை தெரியாமல் மர்மாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது..

500 ஆண்டு கால அரச மரம் வெட்டியதை தடுத்து நிறுத்திய தண்ணீர் இயக்கத்தை சேர்ந்த வினோத்திடம் பேசினோம்…

சார்.. கே.கே.நகர் பகுதியில் லிங்கநகரில் மிகப்பெரிய அரசமரம் இது எப்படியும் 500 ஆண்டுகளுக்கு மேலாக தான் இருக்கும். மரத்தை சுற்றி கீழே இறங்கியுள்ள இந்த கிளைகளே மரத்திற்கு இன்னோரு மரமாக வளர்ந்து நிற்கிறது. பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். இதை இன்று மதியம் இதன் அடிப்பகுதியை வெட்டி எடுத்து செல்வதை பார்த்தவுடன் எனக்கு பகீர் என்று இருந்தது.

உடனே மரம் வெட்டுவதை நிறுத்துங்கள் என்று சொன்னால் எங்க ஏரியா JE தான் வெட்ட சொன்னார் அவரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லி வெட்ட ஆரம்பித்தார். உடனே வெட்டுவதை நிறுத்துங்கள் எனறு கடுமையாக சொன்ன பிறகு நிறுத்தி JEக்கு போன் பண்ணி கொடுத்தார் அவரிடம் பேசினோம் அவரிடம் யார் உங்களுக்கு வெட்ட அனுமதி கொடுத்தாங்க என்று கேட்டவுடன் கமிஷனர் தான் அனுமதி கொடுத்தார் என்று சொல்லவும்.. நீங்க இந்த மரத்தை வெட்டுவதை நிறுத்த வில்லை என்றால் இங்கிருந்து எந்த வண்டியும் எடுத்து போக முடியாது என்று சொன்னவுடன் அவரை இணைப்பை துண்டித்து விட்டார்.

நாங்க இங்கிருந்து மரங்களை ஏற்றக்கூடாது என்ற சொன்னவுடன் அந்த மரம் ஏற்ற வந்தவரும்.. கிளம்பிவிட்டார்கள். சம்பவ இடத்திற்கு வரேன்று என்று சொன்ன JE யும் இது வரை வரவில்லை. இனியும் இந்த மரத்தை வெட்டுவதை அனுமதிக்க மாட்டோம். தேசிய பறவை மயிலை கொன்றால் சிறை தண்டனை என்கிறர்கள் தேசிய மரமான அரசமரத்தை வெட்டி இந்த அதிகாரிக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார்..

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT