Advertisment

தேர்தலுக்குத் தயாராகும் திருச்சி மாநகராட்சி...

Trichy Corporation preparing for elections ...

Advertisment

திருச்சி மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் சிவராசு. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் - 11, 33,020, பெண்கள் - 11,99,635, மூன்றாம் பாலினம் - 231 என மொத்தம் 23,32,886 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். சிறப்புச் சுருக்க முறை திருத்தத்தின்போது 80,095 வாக்காளர்கள் சேர்க்கபட்டுள்ளனர்;7,648 பேர் நீக்கப்பட்டுள்ளனர்;கூடுதலாக 72,447 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு 18 - 19 வயது நிரம்பிய 35,889 பேர்புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 274 இரட்டைப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் (3,10,739), குறைந்த வாக்காளர் உள்ள தொகுதியாக லால்குடி (2,17,526) உள்ளது.

District Collector trichy elections
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe