ADVERTISEMENT

திருச்சியில் கரோனா பாதிப்பு 36 ஆக உயர்வு!

07:22 PM Apr 08, 2020 | Anonymous (not verified)

இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் திருச்சி மாநகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 30 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 5 நாட்களாக யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT


ADVERTISEMENT

ஆனால் இன்று 6 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருச்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி நம்பர் 1 டோல்கேட், உறையூர், லால்குடி, முசிறி தில்லைநகர், பீமநகர், பொன்னகர், அண்ணாநகர், மணப்பாறை, ஆழ்வார்தோப்பு, மண்ணச்சநல்லூர், தென்னூர், பாலக்கரை, திருவரம்பூர், துவாக்குடி ஆகிய பகுதிகளில் கரோனா பாதிப்பு நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் எல்லாம் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது .


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT