Advertisment

திருச்சியில் கரோனா பாதிப்பு 36 ஆக உயர்வு!

இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் திருச்சி மாநகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 30 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 5 நாட்களாக யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.

Advertisment

Trichy Corona impact

ஆனால் இன்று 6 பேருக்குபுதிதாக கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருச்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி நம்பர் 1 டோல்கேட், உறையூர், லால்குடி, முசிறி தில்லைநகர், பீமநகர், பொன்னகர், அண்ணாநகர், மணப்பாறை, ஆழ்வார்தோப்பு, மண்ணச்சநல்லூர், தென்னூர், பாலக்கரை, திருவரம்பூர், துவாக்குடி ஆகிய பகுதிகளில் கரோனா பாதிப்பு நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் எல்லாம் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது .

corona virus covid 19 trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe