Advertisment

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

trichy congress committee against for bjp government issues

இன்று (16.3.2023) காலை 10 மணியளவில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கிரஸ்சார்பில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும்;பெட்ரோல், டீசல், எரிவாயு, சாலை சுங்கவரி விலை ஏற்றத்தை கண்டித்தும்; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை கண்டித்தும்;அதானியை கண்டித்தும்; பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைப்பது குறித்தும்;வேலைவாய்ப்பின்மை குறித்தும்; மோடி அரசை கண்டித்தும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது. தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல்மோகனாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Advertisment

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ் சமூக வலைத்தளப் பிரிவுமாநிலத்தலைவர் அபு தாஹிர், செந்தில் ஜாகிர், உசேன் ஜானி யூசுப் செய்திருந்தனர்.

congress trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe