Trichy commits incident by jumping from college floor due to love failure

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகுமணிகண்டன்(20). இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் அழகுமணிகண்டன் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கிப் படித்து வந்த அழகுமணிகண்டனுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நட்பு இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. இருவரும் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு, காதலைத் தொடர்ந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் திடீரென அழகுமணிகண்டனிடம் பேசுவதை அந்த பெண் தவிர்த்துள்ளார். அவரது செல்போனை அழைப்பையும் கூட நிராகரித்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணை நேரில் சந்தித்து, அழகுமணிகண்டன் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் இந்த நிமிடத்தில் இருந்து நம் காதலை முறித்துக்கொள்ளலாம் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் அழகுமணிகண்டன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று மதியம் அழகுமணிகண்டன் கல்லூரியில் உள்ள 3வது மாடிக்குசென்று கீழே குதித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்த அழகுமணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அழகுமணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் அழகுமணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.