Advertisment

40 பேருடன் பள்ளத்தில் இறங்கிய கல்லூரி பேருந்து

Advertisment

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி இன்று காலை தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே அந்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே சைக்கிளில் வந்தவர்கள்திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, அவர்கள் மீது மோதாமல் தவிர்க்க பேருந்து ஓட்டுநர்கண்ணதாசன் பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்தி, பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்த முயற்சி செய்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த 15 அடி மழைநீர் வடிகால் பாலத்தின் கீழ் உள்ள பள்ளத்தில் இறங்கியது.

பேருந்தில் பயணித்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் என40 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தில் பெண் பேராசிரியர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குசிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

College students bus trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe