Advertisment

ஊராட்சித் தலைவரின் அதிகாரத்தைப் பறித்த திருச்சி ஆட்சியர் 

Trichy Collector who took away the power of the village head

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி மன்றத் தலைவராக கலைச்செல்வி என்பவரும்துணைத் தலைவராக புவனேஸ்வரி என்பவரும் உள்ளனர். தளுகை ஊராட்சியில் அரசின் நிதியைத்தேவையற்ற முறையில் செலவு செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்குக்கிடைத்தபுகாரின் பேரில் அது தொடர்பாக விசாரிக்கப்பட்டது.

விசாரணையில், புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாகத்தெரிகிறது. இதனையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், தளுகை ஊராட்சியில் மேலும் முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்காகத்தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203ன் கீழ் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைத்தற்காலிகமாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உப்பிலியபுரம் ஒன்றிய கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் நிபந்தனைகளுக்குட்பட்டு ஊராட்சிப் பணியாளர்களின் ஊதியம், குடிநீர் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவினம், மின்சாரக் கட்டணம் மற்றும்அனைத்து திட்ட நிதி செலவினம் தொடர்பாக நிர்வகிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு நகல்கள் சம்பந்தப்பட்ட தலைவர், துணைத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe