Advertisment

"வேங்கை வயல் உட்பட எந்த வாக்குப்பதிவு மையத்திலும் மறு வாக்குப்பதிவு இல்லை" - திருச்சி ஆட்சியர்

Trichy Collector says There is no re-voting in any polling center

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18 -வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிவுற்றது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட் மின்னணு வாக்கு இயந்திரங்கள், விவி பேட் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடியில் இருந்துவாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுப்பாட்டு இயந்திர அறையில் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை அடைத்து அனைத்து கட்சியினர்முன்னிலையிலும்சீல் வைக்கப்பட்டது.

Advertisment

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் கூறியதாவது:-ஒவ்வொரு வாக்கு சாவடிகயிலிருந்தும் வாக்கு இயந்திரங்கள் நேற்று ஜமால் முகமது கல்லூரியில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42%வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து இருந்தால் கண்டிப்பாக இன்னும் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் உள்ளது.

Advertisment

நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில கோளாறுகள் காரணமாக விவிபேட் மட்டும் கட்டுப்பாட்டு கருவிகள் மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 5.8 கோடி , தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் 8.6 கோடி வரை பறிமுதல் செய்துள்ளோம். அனைத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மூன்றடுக்கு பாதுகாப்பு பணி இங்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கில் துணைராணுவ கம்பெனியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் சில நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ட்விட்டரில் கூட நமக்கு ஒரு புகார் வந்திருந்தது.உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி விடுமுறை விட சொல்லி ஏற்பாடு செய்தோம்.திருச்சி மக்களவைத் தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் உட்பட, எந்த வாக்கு பதிவு மையத்திலும் மறுவாக்குப் பதிவு இல்லை. திருச்சி மக்களவைத் தொகுதியில், 67.42 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இவ்வாறுதிருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Voting trichy vengaivayal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe