பாரம்பரியத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய ஆட்சியர் 

trichy collector celebrated in pongal celebration

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா களைகட்டி வரும்நிலையில், அரசு சார்பில் சமத்துவ பொங்கல் விழாவும்தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் இனாம் குளத்தூர் சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் இன்று (13.01.2023) சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா‌.பிரதீப் குமார், இ.ஆ.ப. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வந்து மாட்டு வண்டியைஓட்டிச் சென்றார். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் உடன் பொங்கல் வைத்து, பொங்கல் விளையாட்டுப் போட்டிகளைத்தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

trichy collector celebrated in pongal celebration

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. தேவநாதன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் திரு. செல்வராஜ், உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமதி கங்கா தரணி மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் திருமதி கமலம் கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe