trichy city police rescue four young woman related incident 

திருச்சி மாநகரில் உள்ள மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதைதடுக்க திருச்சி மாநகர போலீசார் தீவிரமாககண்காணித்துவருகின்றனர்.

Advertisment

இதையடுத்து திருச்சி பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த நான்கு பெண்களையும் மீட்டு திருச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இடைத்தரகராகசெயல்பட்ட திருச்சி தெற்கு காட்டுரை சேர்ந்த ராஜாத்தி மற்றும் மெஹபூகான் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.