ADVERTISEMENT

பொங்கல் பேருந்து சேவை; போலீஸ் கமிஷனர் அறிவுரை

01:05 PM Jan 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சி மாநகரில் இரண்டு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மன்னார்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை - சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ளன. அந்த தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்யபிரியா இன்று காலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காவல்துறை ஆணையர் சத்யபிரியா கூறுகையில், "பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது இந்த புதிய வழித்தடத்தில் இருந்து புறப்படக்கூடிய பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளபடி பேருந்துகளை நிதானமாக இயக்க வேண்டும். பேருந்து ஓட்டுநர்கள் போதுமான ஓய்வுக்குப் பின்னர் பேருந்துகளை இயக்க வேண்டும். தற்போது மாநகர பகுதிகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் காவல்துறையினர் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் விபத்துகள் கட்டுப்படுத்தப்படும்" என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT