தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தநகைக்கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோரை திருட்டு நகை வாங்கியதாகக்கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சிகே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார்கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் நேற்றுமுன்தினம் இரவு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து திருச்சி கே.கே.நகர் காவல் நிலையஎஸ்.ஐ உமாசங்கரைஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாநகரகாவல் ஆணையர் சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.