/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/மே8999.jpg)
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறதுஎல்பின் பணம் முதலீட்டு நிறுவனம். தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தின் சார்பில் 'அறம் மக்கள் நலச் சங்கம்' தொடங்கப்பட்டது.இதையடுத்து மக்கள் அரசன் பிக்சர்ஸ் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் விமல் நடித்த இரண்டு படங்கள் முழுமையாகப் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rk_3.jpg)
இந்த நிலையில் மக்கள் அரசன் பிக்சர்ஸ் சு.ராஜா தயாரிக்கும் 'மேதாவி' படத்தில் அர்ஜூன், ஜீவா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் நேர்த்தியான கதையுடன் சமூக கருத்தையும் பதிவிடும் பிரபல பாடல் ஆசிரியரும், இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் 'மேதாவி'. இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. மே 15- ஆம் தேதி அன்று பிறந்த நாள் கொண்டாடிய தயாரிப்பாளர் சு.ராஜா, 'மேதாவி'படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்காக 5kg அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 kgs) வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் “ஆக்சன் கிங்” அர்ஜூன்- ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார். மேதாவி நகைச்சுவை பங்கிற்கு சாரா, 'கைதி'படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஓய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குனர் பா.விஜய் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)