Skip to main content

14 வயது சிறுமி எரித்துக்கொலை!!! எங்கே போனது அரசு சார்ந்த குழந்தை பாதுகாப்பு அமைப்புகள்??

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

trichy child incident police investigation

 

புதுக்கோட்டை சிறுமி கொல்லப்பட்டதை போன்று, திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் சிபிசக்கரவர்த்தி, டி.எஸ்.பி. கோகிலா, எஸ்.பி. ஜீயாவுல்ஹக், டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

திருச்சி அருகே 9- ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

குற்றாவாளிகளை பிடிக்க போலீஸ் ஒரு பக்கம் தீவிர விசாரணையில் இருக்கின்றனர். அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்தோ, அநீதியோ இழைக்கப்பட்டால் சம்பவ இடத்திற்கு சென்று இது குறித்து விசாரணை செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசி, அல்லது அங்கு உள்ள சுழ்நிலை குறித்து விசாரிக்க வேண்டிய திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ்கண்ட துறைகளான,

 

DCPU- மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு.

CMPO- குழந்தை திருமண தடுப்பு அலுவலர்.

CWC- குழந்தைகள் நல குழு

ACTU- குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு.

CHILDLINE 1098 - குழந்தைகள் உதவி எண் 1098.

JJB -  இளம் சிறார் நீதி வாரியம்.

PO - நன்னடத்தை அலுவலர்..

 

இவர்கள் அனைவரும் குழந்தைகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய அதிகாரிகள். ஆனால் நேற்று சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட எட்டரை அதவத்தூர் பாளையம் அருகே 14 வயது சிறுமி சந்தேகிக்கும்படி, இறந்து கிடந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த அதிகாரிகள் யாரும் தகவல் தெரிந்தும் நேரில் சென்று பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.