Trichy chain snatching case

திருச்சி கே.சாத்தனூர் கவி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28). இவர் கீழக்குறிச்சி கிராம தபால் அலுவலகத்தில் (ஜி.டி.எஸ்.) ஊழியராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

தினமும் மொபட்டில் சென்று சம்பந்தப்பட்டவர்களின் வீட்டு முகவரியை தேடி சென்று உரிய தபால்களை வினியோகிப்பது வழக்கம். அதன்படி, வழக்கம்போல் மாலையில் பணி முடிந்து தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஜி.கார்னர் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் புவனேசுவரியை மோதுவது போல் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து புவனேஸ்வரி பொன்மலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.