trichy chain incident police investigation started 

Advertisment

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 47) இவர் பொன்மலை வாட்டர் டேங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அந்தப் பெண்ணை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் நடைப்பயிற்சிமேற்கொண்டதிருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி சாந்தா (வயது 76) என்ற மூதாட்டியிடம் வழிப்பறி செய்ய முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், அரியலூர் திருமணப்பாடியைச் சேர்ந்த சார்லி (வயது 73) என்ற முதியவரிடம் சங்கிலியாண்டபுரம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவங்கள் திருச்சியில் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது.