போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; சோதனை மேற்கொண்டு வரும் என்ஐஏ 

trichy central jail  NIA conducting the investigation

திருச்சி மத்திய சிறைச்சாலையில்உள்ள சிறப்பு முகாமில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் எனப் பலர் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் இன்று காலை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் 5க்கும் மேற்பட்டோர் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தசோதனை நிறைவு பெறும்போது சோதனைக்கான காரணம், கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள்வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு சோதனை மேற்கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் லேப்டாப், ஃபோன்உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி உள்ள நிலையில் மேலும் சோதனை நடத்தப்படுவதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மத்திய சிறை சிறப்பு முகாமில்தான்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகியோர் இருக்கிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

NIA trichy
இதையும் படியுங்கள்
Subscribe