trichy central bus stand bangalore it engineer laptop incident

Advertisment

பேருந்தில் பயணம் செய்தபயணி ஒருவரின் லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம்கலெக்டர் அலுவலக ரோடு குமுளிதோப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் பெங்களூர் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது லேப்டாப்புடன் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து மத்திய பஸ் நிலையம் செல்லும் ஒரு டவுன் பஸ்ஸில் வீடு திரும்பி உள்ளார்.

அப்போது பஸ் நிலையம் வந்ததும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் பார்த்தபோது லேப்டாப்பை காணாமல் திடுக்கிட்டார். அப்போது தான் மர்ம நபர்கள் ஓடும் பஸ்ஸில் லேப்டாப்பை திருடிக் கொண்டு இறங்கிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து குமார் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.