திருச்சி பெரிய மிளகுபாறை கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஜி டி எல் கம்பெனியின் செல்போன் டவர் இருக்கிறது. இந்த டவரில் ஆய்வு செய்வதற்காக அந்த நிறுவனத்தின் மேலாளர் சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார்(44) என்பவர் வந்துள்ளார். அப்போது செல்போன் டவரில் பொருத்தப்பட்டிருந்த 10 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான பல எலக்ட்ரானிக்ஸ் தொலைதொடர்பு சாதனங்கள் மாயமாகி இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்துள்ள போலீசார் பல லட்சம் மதிப்பிலான செல்போன் எலக்ட்ரானிக்ஸ் சாதனத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.