trichy cash incident police investigation 

திருச்சியில் கத்திமுனையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

திருச்சி கருமண்டபம் பொன்னகர்4-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மாணிக்கராஜ் (வயது 25). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கருமண்டபம் பகுதி ஆர்.எம்.எஸ் காலனி அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டி மாணிக்கராஜிடம் பணத்தை பறித்து சென்று விட்டனர்.

Advertisment

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் குமரன், வீரபாண்டியன், கார்த்திக், தவசி ஆகிய நான்கு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.