Trichy Carvy Company fired 600 workers on curfew

Advertisment

திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள கார்வி டேட்டா மேனேஜ்மென்ட் சர்வீஸ் லிமிடெட் என்ற கால் சென்டர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு 700 பேருக்கு பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா மேனேஜ்மெண்ட் பணி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

Advertisment

இந்த நிலையில் வேலைக்கு வந்த 300 பேரையும் பணி நீக்கம் செய்தாகசொல்லி உள்ளே அனுமதிக்கவில்லை. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கியது குறித்து ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்கு தகுந்த ஊதியம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இந்த ஊழியர்கள் நாம் பேசுகையில்.. இந்த கார்பரேட் கம்பெனியில் பட்டாதாரிகள்மட்டும் வேலை செய்கிறார்கள்.குறைந்த சம்பளம் ரூ 8,500 முதல் அதிகபட்சமாக 40,000 ரூபாய் வரை நிர்ணயம் செய்தார்கள். எல்லோரிடமும் 10 ம் வகுப்பு அல்லது 12 –ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதல் ஒர்ஜினல் வாங்கி கொண்டு தான் வேலைக்கு சேர்ந்தார்கள். இந்த ஊரடங்கு ஆரம்பத்தில் வெளியூரில் இருந்து வேலைக்கு வந்த 300 பேரை அப்போது பணிநீக்கம் செய்தார்கள்.

Trichy Carvy Company fired 600 workers on curfew

தற்போது இன்னோரு 300 பேரை எந்தவித காரணம் இன்றி நீக்கியிருக்கிறார்கள். எங்களுக்கான பணித் தொகை , பி.எப், தொகை, எங்கள் ஒர்ஜினல் சான்றிதல் இன்றி தவிக்கிறோம் இது குறித்து யாரிடம் கேட்டாலும் எந்த பதிலும் சொல்ல மறுக்கிறார்கள்.

இதுகுறித்து விசாரித்த போது.. ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை கொடுத்திருந்தது. ஆனால் இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி தொகை கட்டவில்லை என்பதால் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது. இதனால் நாங்கள் வேலை இன்றி எங்கள் சான்றிதல் இல்லாமல் தவிக்கிறோம் என்றார்கள்.