Advertisment

திருச்சி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை; அதிரடியாக செயல்பட்ட தனிப்படை போலீசார் 

trichy businessman devendran house issue police taken by action 

திருச்சி, திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ் நகரில் தேவேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 150க்கும் அதிகமான சவரன் நகைகள், லேப்டாப் மற்றும் பல பொருட்கள் திருடு போனது. இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.குற்றவாளிகளை கைது செய்ய திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்துதேடுதல் வேட்டையில்ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை மஞ்சத்திடல் அருகே வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நிற்காமல் சென்றதைப் பின் தொடர்ந்து காவல்துறையினர் சோதனை செய்தபோது செல்வ கார்த்திக் என்கிற இளைஞர் காரில் 22 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் நகைவைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில் திருவையாற்றில் உள்ள புது அக்ரஹாரத்தில் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த 96 பவுன் தங்க நகை, 47 லட்சத்து 20 ஆயிரம் பணம்கைப்பற்றப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

செல்வ கார்த்திகேயனிடம் இருந்து 108 பவுன் தங்க நகைகள்,5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 5 லட்சரூபாய் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகள்,ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகள், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், 50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe