Advertisment

ஊக்கை விழுங்கிய சிறுவன்; அறுவை சிகிச்சை செய்யாமலேயே நீக்கிய மருத்துவர்கள்

Trichy boy problem; Cleverly corrected doctors

திருச்சியில் சிறுவன் ஒருவன் ஊக்கை விழுங்கிய நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யாமலேயே சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த ஊக்கைமருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.

Advertisment

திருச்சி மாவட்டம் குண்டூர் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரின் இரண்டு வயது மகன் சேஃப்டி பின் எனப்படும் ஊக்கை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பொழுது தெரியாமல் விழுங்கியதால் கத்தியுள்ளான். உடனடியாகச் சிறுவனை,திருச்சிராப்பள்ளி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனின் உடலை எக்ஸ்ரே எடுத்தபோது ஊக்குதொண்டைப் பகுதியில் விரிந்தநிலையிலிருந்தது தெரிய வந்தது. உடனடியாக மருத்துவர்கள் ஸ்கோபி என்னும் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமலேயேதொண்டையில் சிக்கி இருந்த ஊக்கை பத்திரமாக வெளியே எடுத்தனர். தற்போது சிறுவன் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe