பாஜக திருச்சி மண்டலத் துணைத் தலைவராக உள்ள விஜயரகு என்பவரை பரபரப்பான மக்கள் கூட்டம் நிறைந்த காந்திமார்கெட் பகுதியில் இன்று (27/01/2020) அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

விஜயரகு என்பவர் காந்தி மார்கெட் பகுதியில் வரும் லாரிகளுக்கு டிக்கெட் கொடுப்பவர். இவருடைய மகள் அவரை பார்க்க அடிக்கடி வரும் அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்கும் மிட்டாய் பாபு என்பவருடம் பழக்கம் ஏற்பட இதை கேள்விப்பட்ட விஜயரகு ஆத்திரம் அடைந்து மிட்டாய் பாபுவை மிரட்டி இருகின்றார்.

(படம் - உயிரிழந்த பாஜக பிரமுகர்)

Advertisment

trichy bjp leader incident police protection increased , shops closed

Advertisment

இதனால் ஏற்கனவே 2 முறை விஜயரகு மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. காந்தி சந்தை காவல் நிலையத்திலும் பாபு மீது புகார் அளித்து விசாரணை நடைபெற்றது.இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த மிட்டாய் பாபு அண்மையில் பிணையில் வந்துள்ளார். இந்த பகையை வைத்தே இன்றைய தினம் அதிகாலை தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவர் மீது கொலை வழக்கை பதிவு செய்த காந்தி சந்தை காவல் நிலைய போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

(படம் - மிட்டாய் பாபு)

trichy bjp leader incident police protection increased , shops closed

இந்த நிலையில், விஜயரகுவின் சடலம் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் பா.ஜ.கவினர் திரண்டு வருகின்றனர். எச்.ராஜா வந்த பின்புதான் உடலை பெற்றுக்கொள்ளப்படும் என்று பா.ஜ.கவினர் கோஷம் போட்டு வருகிறார்கள்.

trichy bjp leader incident police protection increased , shops closed

திருச்சி மாநகரில் பாலக்கரை, சத்திரம், காந்திமார்கெட் பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 500- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநகர் முழுவதும் பதட்டமான சூழ்நிலையில் உள்ளது.

trichy bjp leader incident police protection increased , shops closed

இதனிடையே பா.ஜ.கவினர் தேவையில்லாமல் முஸ்லிம் பயங்கரவாதிகள் என்று திசை திருப்புவதாக முஸ்லிம் அமைப்புகள் மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜுலுவிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.