Advertisment

கவரிங் நகைகளை வைத்து ரூ. 1 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி...!

கிராம மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்க்காவும் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் வங்கியின் அதிகாரியே மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Trichy Bank fraud issue

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தச்சன்குறிச்சி, புதூர் உத்தமனூர், ரெட்டிமாங்குடி ஆகிய கிராமங்களுக்கு சேவை வங்கியாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தச்சன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஸ்கண்ணன் (32) என்பவர் கூட்டுறவு வங்கி அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் ராஜேஸ்கண்ணனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அதே கூட்டுறவு வங்கியில் ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த மூத்த அலுவலர் பாலகிருஷ்ணன் (58) பொறுப்பு அலுவலராக நியமிக்கபட்டுள்ளார். இந்நிலையில் பயிர்கடன், நகைகடன் மற்றும் இ-சேவை மையங்களின் பொறுப்புகளை பாலகிருஷ்ணன் கண்காணிப்பில் கூட்டுறவு வங்கி செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 6ம் தேதி குல்முகமது என்ற அலுவலரை லால்குடி வட்டார கூட்டுறவு துணை கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டார்.

Trichy Bank fraud issue

Advertisment

இந்நிலையில் தச்சன்குறிச்சியை சேர்ந்த முத்துராணி, "தான் 7 பவுன் நகையை விவசாய கடனில் அடமானம் வைத்துள்ளேன். ஆனால் தனக்கு கடன் கொடுத்த ரசீதில் நகைக்கு உள்ள தொகையை விட கூடுதல் தொகைக்கு அடமானம் எழுதப்பட்டுள்ளது. தலைவர், துணைதலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் தலையீடு இல்லாமல் இவ்வளவு தொகை முறைகேடு நடந்துள்ளது" என்று கேள்வி எழுப்பினார். மேலும் முறையாக வங்கியின் கணக்குகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

மேலும் பாக்கியராஜ், ஜெயா, சிவக்குமார், உள்ளிட்ட 36க்கும் மேற்பட்ட பெயர்களில் போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு நகைகளை அடமானத்தில் எடுக்காமலேயே கவரிங் நகைகளை வைத்து ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 300 கொள்ளையடிக்கப்பட்டதை புதிதாக நியமனம் செய்த குல்முகமது கண்டுபிடித்தார்.

இது மொத்தம் 1 கோடிக்கு மேல் இந்த மோசடி கொள்ளை நடந்திருக்கிறது என்கிறார்கள். இதுகுறித்து கூட்டுறவு வங்கியின் தலைமை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே விசாரணை நடத்தியதில் ராஜேஸ்கண்ணன் மற்றும் வங்கியில் வேலை செய்து வரும் பணியாளர்கள் போலியாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் அடமானம் வைத்த நகை வங்கியில் உள்ளதா என தெரிந்து கொள்வதற்காக வங்கியை முற்றுகையிட்டனர். மேலும் வங்கியில் ரெட்டிமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ், பெருமாள், ராமர் உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்டோர் பயிர்கடன் பெற விண்ணப்பித்ததில் அவர்களுக்கு உரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பயிர்கடன் வழங்காத நிலையில் பயிர்கடன் கேட்டு வங்கியை முற்றுகையிட்டனர்.

மேலும் அதிகாரிகள் சோதனை மற்றும் பொதுமக்களின் முற்றுகையை அடுத்து வங்கிக்கு வந்த சிறுகனூர் காவல்நிலைய போலீசார் பொதுமக்களை கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். மேலும் அதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரை அடுத்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வங்கியில் போலி ஆவணங்ககள் தயார் செய்து பல லட்சம் மதிப்பீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட ரஜேஸ்கண்ணன் தலைமறைவானதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

police fraud bank trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe