Advertisment

திருச்சியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்கள் ஆர்வம்

trichy anbil  trust conduct job fair mela

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

Advertisment

அன்பில் அறக்கட்டளையின் நிறுவனரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழியின் துணைவியார் ஜனனி மகேஷ் பொய்யாமொழி இந்தவேலைவாய்ப்பு முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்டமுன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முகாமில் கலந்து கொண்டவர்களில் 600-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின்துணைவியார் வழங்கினார்.

Advertisment

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுள்ளசுமார் ஆயிரம் பேருக்கும் மேல் பணி நியமன ஆணைகள்வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில் விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி அன்பில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள்அன்பில் பெரியசாமி, வாளாடி கார்த்திகேயன், கல்லூரியின்முதல்வர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

job trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe