சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒரு பயணிக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

இந்நிலையில், சீனாவில் இருந்து ஏற்கனவே திரும்பிய பல மாணவர்கள் தனியாக கண்காணிக்கப்பட்டதில், கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரையும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

trichy airport singapore flight passenger check up details health department

இந்த நிலையில் இன்று (02/02/2020) காலை சிங்கப்பூரில் இருந்து transit விமானம் ஒன்று திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் காய்ச்சலுடன் வந்த மதுரை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த தவமணி என்பவரது மகன் அருண் 27 என்ற பயணிக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்திருப்பதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

-மகேஷ்