Advertisment

அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் மகன்... விஷம் குடித்த பெற்றோர்!

TRICHY AIPORT SON GOVERNMENT QUARANTINE PARENTS INCIDENT

Advertisment

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள அழுந்தலையர் கிராமத்தைசேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், சிங்கப்பூரில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவர் சமீபத்தில் சொந்தவூருக்கு திரும்பியுள்ளார். அப்போதுதிருச்சி விமான நிலையத்தில் கரோனா மருத்துவ பரிசோதனைக்காக அவரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பின்பு, அவர் அரசு தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அனுப்பப்பட்டார்.

மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்குகரோனா இல்லை என்பது தெரியவந்தது.இதனிடையே மகன் அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த தகவலை அறிந்த பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாதாக தகவல் கூறுகின்றன. அவர்களால் ஆறுதல் தேட முடியாமல் வயலுக்கு அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வீட்டிலே மயங்கிக் கிடந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சிறுகனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விஷம் குடித்த தம்பதியிரை மீட்டு திருச்சி அரசுமருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிசிக்சையில் இருக்கிறார்கள்.

hospital parents incident son airport trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe